திண்டிவனத்தில் கத்தி முனையில் 17 பவுன் நகை, பணம் கொள்ளை : எஸ்பி நேரில் விசாரணை

By செய்திப்பிரிவு

திண்டிவனத்தில் கத்தி முனையில் 17 பவுன் நகை, பணம்,வெள்ளி பொருட்கள் கொள்ளைய டிக்கப்பட்டது.

திண்டிவனம் அய்யந்தோப்பு காமராஜர் நகரில் வசிப்பவர் சக்திவேல். இவர் அரசு வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். இவரதுமனைவி சுபலட்சுமி திண்டிவனத் தில் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். இத்தம்பதியினருக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ள னர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல சக்திவேல் தன் குடும்பத்தாருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை சக்திவேல் வீட்டின் முன்பக்க கதவை உடைத்துவீட்டுக்குள் 4 மர்ம நபர்கள் புகுந்தனர். சக்திவேல் மனைவி சுபலட்சுமிகழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். அவர் அணிந்திருந்த 5 பவுன்செயின் மற்றும் மோதிரம், வளை யல், சக்திவேல் அணிந்திருந்த மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். பின்னர் சக்திவேலை பீரோவை திறக்கவைத்து அதிலி ருந்த நகைகள், 1.5 கிலோ வெள்ளிபொருட்கள் மற்றும் ரூ. 15 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர். சக்திவேல் மற்றும் அவரது மனைவியிடம், மொபைல் போன்களை பறித்தனர். வீட்டில் இருந்தவர்களை ஒரு அறைக்குள் தள்ளி வெளியே பூட்டிவிட்டு தப்பி சென்றனர்.

வீட்டுக்குள் பூட்டப்பட்ட இத்தம்பதியினருக்கு வெளியுலக தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அறையின் ஜன்னலை திறந்து, சாலையில் செல்வோரை அழைத்துவீட்டை திறக்க செய்தனர்.

பின்னர் சக்திவேல் ரோஷனை போலீஸாருக்கு தகவல் தெரி வித்தார்.

இதையடுத்து விழுப்புரம் எஸ்பி நாதா, திண்டிவனம் டிஎஸ்பி (பொறுப்பு) இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சீனிபாபு உள்ளிட்ட போலீஸார் நேரில் விசாரணை மேற் கொண்டனர்.

மேலும் மோப்பநாய் சாய்னா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் சென்று நின்றது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீஸார் ஆய்வுக் குட்படுத்தியுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் 17 பவுன் மற்றும் வெள்ளிப்பாத்திரங்களின் மதிப்பு ரூ. 10 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்