விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தில் கட்டிடவியல் (சிவில்) பிரிவில்நடைபெற்ற ஒப்பந்த முறைகேடு கள் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று மின்வாரிய அனைத்து பணியாளர்கள் பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தில் கட்டிடவியல் (சிவில்) பிரிவில் முறைகேடுகளால் பணம் மோசடி செய்துள்ளதாக தெரிகி றது.
இதுகுறித்து மின்வாரிய அனைத்து பணியாளர்கள் பொறியாளர்கள் சங்கம் சார்பில் சண்முகம் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மின்வாரிய விழிப்பு பணித்துறை தலைவர் தமிழ் செல்வனிடம் புகார் அளித்தார். இதன் பேரில் 5.3.2020-ல்உதவி செயற்பொறியாளர் டெனரிடா அனன்சியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் மின்வாரிய அனைத்து பணியாளர்கள் பொறியாளர்கள் சங்கம் சார்பில் வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப் பது:
விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தில் கட்டிடவியல் (சிவில்) முறைகேடு தொடர்பான முதல் விசாரணைக் கமிட்டி அறிக்கையில் ஊழல் நடந்த விவரங்கள் சரிவர கணக்கிடப்படவில்லை. இரண்டாம் கமிட்டி ஆய்வு செய்ததில் விழுப்பு ரம் தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட ரெக்ரேஷன் கிளப் கட்டுமான பணிக்கான மதிப்பீடு தொகை ரூ. 27 லட்சமாகும். அந்த பணி முடிவடையாத நிலை யில் சமர்ப்பிக்கப்பட்ட பில் அதிலேயே ரெக்கவரி வரும் அள விற்கு ஊழல் நடந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த ஊழலில் தொடர்புடைய உதவி பொறியாளர், உதவி செயற் பொறியாளர், செயற்பொறியாளர் (சிவில்) மூவர்மீதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் துறை ரீதியாக எடுக்கவில்லை.
சங்கத்தின் சார்பாக 16. 6 2021-ல் விழுப்புரம் தலைமை பொறியாளர் இந்த ஊழல் விவகாரத்தில் கால தாமதம் செய்யாமல் கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தவறு செய்தவர்களை வைத்துக்கொண்டே புதிதாக எவ்வித டென்டர் நடத்தக்கூடாது என்று கடிதம் எழுதி இருந்தோம். ஆனால் இதுநாள்வரை எங்களது மனுவை பரிசீலிக்காமல் இருப்பது மிகுந்த வருத்தமாக உள்ளது
எனவே நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வும், லஞ்ச, ஊழல் ஒழிப்பு இயக்குநரிடம் மேல்முறையீடு செய்யவும் தயாராக உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago