செகந்தராபாத்துக்கு - மாற்றுத்திறனாளிகள் பயிற்சி மையத்தை மாற்றுவதற்கு எதிராக வழக்கு :

By செய்திப்பிரிவு

மதுரையைச் சேர்ந்த கஸ்தூரி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் கீழ் பார்வைத் திறன், மனநல பிறழ்வு, கேட்கும் திறன் மற்றும் எலும்பியல் உள்ளிட்ட பல வகை மாற்றுத் திறனாளிகளை மேம்படுத்துவதற்கான தேசிய பயிற்சி மையம் கடந்த 2005-ல் சென்னையில் தொடங்கப்பட்டது.

இந்த மையத்தில் பல்வகை மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்த இளங்கலை, முதுகலை, எம்.பில் மற்றும் டிப்ளமோ உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டன. இந்த மையத்தை செகந்தராபாத்திலுள்ள அறிவுசார் திறன் குறைந்த மாற்றுதிறனாளிகளுக்கான மையத்துடன் இணைக்க மே 12-ல் நடந்த இயக்குநர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே சென்னை பயிற்சி மையத்தை செகந்தராபாத் மையத்துடன் இணைக்கும் முடிவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதை நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கு.சாமிதுரை வாதிட்டார். மத்திய சமூக நீதி மாற்றுத்திறனாளிகள் துறை செயலர் மற்றும் இயக்குநர், சென்னை மைய இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்