தமிழகம் முழுவதும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நாளை மறுநாள்(நவ.1) பள்ளிகள் திறக் கப்பட உள்ளன.
இதையொட்டி, கரூர் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, போக்குவரத்துத் துறை, பள்ளிக்கல்வித் துறை ஆகிய வற்றின் சார்பில், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி கரூர் வெண்ணெய் மலையில் உள்ள தனியார் அரங்க மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இந்நிகழ்வுக்கு தலைமை வகித்த ஆட்சியர் த.பிரபுசங்கர், பள்ளி வாகனங்களை பார்வை யிட்டு, அவை இயங்கக்கூடிய நிலையில் உள்ளனவா? அவசர வழி, முதலுதவிப் பெட்டி, வேகக்கட்டுப்பாட்டு கருவி, சிசிடிவி கேமரா உள்ளிட்ட வசதிகள் செய்யப் பட்டுள்ளனவா? என ஆய்வு செய்தார். உரிய வசதிகள் செய்யப்படாத வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து, தீப்பிடித்தால் அணைப்பது குறித்து கரூர் தீயணைப்புத் துறை சார்பில் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆய்வின்போது, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந் தனர். இதுதொடர்பாக, ஆட்சியர் த.பிரபுசங்கர் கூறியபோது, “மாவட்டத்தில் மொத்தம் உள்ள 92 பள்ளிகளில் 463 வாகனங்கள் உள்ளன. இவற்றை ஆய்வு செய்யும் பணி தற்போது தொடங்கி உள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago