சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் : கலெக்டிவ் குட் பவுண்டேஷன் மூத்த ஆலோசகர் பேச்சு

By செய்திப்பிரிவு

‘சுத்தம் சுகாதாரம்’ குறித்த விழிப்பு ணர்வை வீட்டில் இருந்து தொடங்க வேண்டும் என கலெக்டிவ் குட் பவுண்டேஷன் மூத்த ஆலோசகர் கே.வைத்தியநாதன் தெரிவித்தார்.

‘இந்து தமிழ்’ நாளிதழ் சார்பில் ‘சுத்தம் சுகாதாரம்’ இணை யவழி சுகாதார விழிப்புணர்வு தொடர் நிகழ்ச்சி முன்னெடுக்கப் பட்டுள்ளது.

டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா, கலெக்ட்டிவ் குட் பவுண்டேஷன், அவ்வை வில்லேஜ் வெல்பேர் சொசைட்டி ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இந்த விழிப் புணர்வு நிகழ்ச்சி 2022 பிப்ரவரி வரை நடத்தப்படவுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக காஜாமலை வளாகத்தில் உள்ள வாணாள் வரை கற்றல் வளாகத்தில் நேற்று இந்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி, அரியலூர், பெரம்ப லூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த 72 தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை பாரதிதாசன் பல்க லைக்கழக சமூகப் பணித் துறைத் தலைவர் ஆர்.மங்கலேஸ்வரன் தொடங்கி வைத்தார். மருத்துவர் என்.சரண்யா, இணைப் பேராசிரியர் ஜெ.ஓ.ஜெரிடா ஞானஜேன் எல்ஜோ, உதவிப் பேராசிரியர் என்.ராஜவேல் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

சுத்தம் சுகாதாரம் விழிப்புணர் வுத் திட்டம் குறித்து கலெக்ட்டிவ் குட் பவுண்டேஷன் மூத்த ஆலோசகர் கே.வைத்தியநாதன் பேசியது:

சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை வீட்டில் இருந்து அதாவது நம் பிள்ளைகள், உறவினர்கள், பணியிடங்களில் இருந்து தொடங்க வேண்டும். தொடர்ந்து அனைத்துத் தரப்பின ருக்கும் இந்த விழிப்புணர்வு ஏற்படும்போது ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். இது நாட்டின் வளர்ச்சிக்கு உத வும்.

இந்தத் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றும் தொண்டு நிறுவ னங்களுக்கு கேடயத்துடன், இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ள நிறுவனங்களிடமிருந்து தகுந்த அங்கீகாரம் அளிக்கப்படும் என்றார்.

ஸ்கோப் தொண்டு நிறுவன இயக்குநர் எம்.சுப்புராமன், கழிப் பறை பயன்பாட்டின் அவசியம் குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில், அவ்வை வில் லேஜ் வெல்பேர் சொசைட்டி செயலாளர் கே.கிருஷ்ணகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன், ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், ரவிக்குமார் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனை வருக்கும் ஸ்கோப் தொண்டு நிறுவனம் தயாரித்த கையடக்க- குறைந்த அளவு தண்ணீரில் கை கழுவும் கருவி மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்