ஸ்ரீவைகுண்டத்தில் சாக்குப் பையால் முகத்தை மூடி பெண்ணிடம் தாலிச்சங்கிலியை பறித்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குளம் தெருவைச் சேர்ந்த கோபால் மனைவி அருணாச்சலவடிவு (59).இவர் கடந்த 30-ம் தேதி தனது மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக தாமிரபரணி நதிக்கரையோரம் கிருஷ்ணன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள்சாக்குப்பையைக் கொண்டு அவரது முகத்தை மூடி, அவர்அணிந்திருந்த 5 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துச் சென்றனர்.
ஸ்ரீவைகுண்டம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ஆழ்வார்தோப்பு சாலையில் நேற்றுமுன்தினம் ரோந்து சென்றபோது, அங்குள்ள தோப்பில் 3 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். போலீஸாரைக் கண்டதும் அவர்கள் தப்பியோட முயற்சித்தனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள், ஸ்ரீவைகுண்டம் அரசாழ்வார் கோயில் தெருவைச் சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் மாயாண்டி (31), சந்தையடி தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன்இசக்கிராஜா (26) மற்றும் செய்துங்கநல்லூர் வி.கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் அருண்ராஜேஷ் (30) என்பதும், அருணாச்சலவடிவுவிடம் நகையைப் பறித்தது இவர்கள்தான் என்பதும் தெரியவந்தது.
அதேபகுதியைச் சேர்ந்த கங்கை முருகன் மகன் மணிகண்டன் என்பவர் மூலம் நகையை சாத்தான்குளத்தில் உள்ள ஒரு பட்டறையில் விற்பனை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். 3 பேரையும் கைது செய்த போலீஸார், சாத்தான்குளம நகை பட்டறையில் உருக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 5 பவுன் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago