தூத்துக்குடியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு :

By செய்திப்பிரிவு

பள்ளிகள் வரும் நவம்பர் 1-ம் தேதிதிறக்கப்படுவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 157 பள்ளி வாகனங்கள் உள்ளன. இவை வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்துக்கு கொண்டுவரப்பட்டு முழுமையாக சோதனை செய்யப்பட்டன. இந்த பணிகளை மாவட்டஆட்சியர் கி.செந்தில் ராஜ், எஸ்பி எஸ்.ஜெயக்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.விநாயகம் ஆகியோர் கண்காணித்தனர். மூன்று வாகனங்கள் தகுதியில்லை என கண்டறியப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கூறியதாவது: பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, மருத்துவ உபகரணங்கள், அவசரகால கதவு,கரோனா விழிப்புணர்வு தொடர்பான ஸ்டிக்கர், முகக்கவசங்கள் ஆகியவை உள்ளனவா என ஆய்வு செய்யப்படுகிறது. அதுபோல வடகிழக்கு பருவமழையில் பள்ளி வாகனங்களை எவ்வாறு இயக்க வேண்டும், போக்குவரத்து விதிமுறைகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும், மாணவர்களை பள்ளி வாகனத்தில் பாதுகாப்பாக எவ்வாறு அழைத்துச் செல்லவேண்டும் என வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்