நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் தூத்துக்குடி மாநகராட்சி :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாநகராட்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்த பயிற்சி நேற்று நடைபெற்றது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிதேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படி, மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளும் தலா 10 வார்டுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு 10 வார்டுகளுக்கும் தேர்தல்பணிகளையும் மேற்கொள்வதற்காக 6 உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, மாநகர நல அலுவலர் வித்யா, செயற்பொறியாளர் (திட்டம்) ரங்கநாதன், உதவி ஆணையர் (பணியமைப்பு) சந்திரமோகன், உதவி செயற்பொறியாளர் (பணிகள்) சரவணன், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) ராமச்சந்திரன் ஆகிய 6 பேரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி தேர்தல் பணியாளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்த பயிற்சி நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ தலைமை வகித்தார். பயிற்சியாளர் அரிகணேசன் பயிற்சி அளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்