திருவண்ணாமலை மாவட்டத் தில் 3 இளைஞர்களை காவல் துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தோக்கவாடி கிராமம் வடக்கு தெருவில் வசிப்பவர் முத்துசாமி மகன் விக்னேஷ் என்கிற சஞ்சலான்(30). இவர், மேல்புழுதியூர் கிராமத்தில் வசிக்கும் பழனி என்பவரிடம் வழிப்பறி செய்ததாகக் கூறி செங்கம் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில் வசிக்கும் கலியபெருமாள் மகன் முருகன்(27), இரும்புலி கிராமத்தில் வசிக்கும் குணசேகரன் வீட்டில் திருடியதாக கண்ணமங்கலம் காவல் துறை யினர் கைது செய்துள்ளனர்.
இதேபோல், திருவண்ணா மலை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் வசிக்கும் கோபால் மகன் பெருமாள்(40), சாராயம் விற்பனை செய்ததாக கூறி கீழ்பென்னாத்தூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் 3 பேரது, சட்ட விரோத நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பரிந்துரையின்பேரில், ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில், விக்னேஷ், முருகன், பெருமாள் ஆகிய 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான ஆணைகளை வேலூர் மத்திய சிறையில் உள்ள வர்களிடம் காவல் துறையினர் வழங்கினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago