நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பான தீபாவளி கொண்டாட்டம் மற்றும் உலக சாதனை முயற்சியாக திருவண்ணாமலையில் பற்கள் மற்றும் ஒரு விரல் மூலம் 2,200 கிலோ எடையுள்ள காரை இழுத்து சித்த மருத்துவர் சாதனை செய்துள்ளார்.
நேரு யுவகேந்திரா மற்றும் தீப மலை ஆன்மிக தொண்டு இயக்கம் சார்பில் தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மருத்துவர் யமுனா ஹரிகோவிந்தன் வரவேற்றார். முன்னாள் நீதிபதி கிருபாநிதி தொடங்கி வைத்தார். பற்கள் மற்றும் ஒரு விரல் மூலமாக தலா 200 மீட்டர் தொலைவுக்கு 2,200 கிலோ எடையுள்ள காரை சித்த மருத்துவர் ஹரிகோவிந்தன் இழுத்து அசத்தினார்.
இவர், யோகாசனம் மற்றும் மூச்சு பயிற்சிகளை தினசரி செய்து வருவதாகவும், அதன்மூலமாக தனக்கு காரை இழுக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு பயிற்சி பெற்றதாக தெரிவித்தார். முடிவில், யோகாசன பயிற்சியாளர் சுரேஷ் குமார் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago