திருப்பூர் காங்கயம் சாலை வெங்கடேஷ்வரா நகரில் ரேஷன் அரிசி பதுக்கி விற்பதாக, குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, வட்டாட்சியர் சுந்தரம் தலைமையிலான குழுவினர் வெங்கடேஸ்வரா நகர் கதிர்வேல் கார்டன் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஆய்வு செய்தனர். அங்கு 50 கிலோ எடைகொண்ட ரேஷன் அரிசி மூட்டைகள் 67 எண்ணிக்கையில் இருப்பதைக் கண்டறிந்தனர். யாரும் இல்லாததால், சுமார் 3 டன் ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குக்கு இடம் மாற்றினர். அரிசி பதுக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் உரிமையாளரை கண்டுபிடிக்க முடியாததால், அந்த கட்டிடத்துக்கு குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்றுமுன்தினம் ‘சீல்’ வைத்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago