ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் - செங்கை மாவட்டத்தில் தரிசு நிலம் கணக்கெடுப்பு : விளை நிலங்களாக மாற்ற முயற்சி

By செய்திப்பிரிவு

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் விளை நிலங்களாக மாறப்போகும் தரிசு நிலங்களின் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் காட்டாங்குளத்தூர், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், மதுராந்தகம், பவுஞ்சூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய 7 வட்டாரங்களில் இருந்து தலா 7 கிராம பஞ்சாயத்துகளும், சிட்லபாக்கம் வட்டாரத்தில் 4 கிராம பஞ்சாயத்துகளும் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த கிராம பஞ்சாயத்துகளில் தரிசு நில விவரங்கள், இதர அடிப்படை புள்ளிவிவரங்கள் வேளாண்மைத் துறை அலுவலர்களால் முழுவீச்சில் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ் கூறியதாவது:

இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் பயிர் செய்ய முடியாத நிலையில்உள்ள தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றவும், இந்த நில விவசாயிகளின் குழுக்களை அமைக்கவும், பொது ஆழ்துளைக் கிணறு மற்றும் பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ளவும் தரிசு நிலங்கள் குறித்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அலுவலர்களை அணுகலாம்

தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துகளில் தரிசு நிலங்களை கொண்டுள்ள விவசாயிகள் தங்களின் பகுதி வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்