ரத்தசோகை குறைபாடு பெரும் சவாலாக உள்ளது : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கருத்து

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்புகள அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்டம் இணைந்து நடத்தியஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகையைக் கட்டுப்படுத்துதல், கரோனா தடுப்பூசி 2-ம் தவணையின் முக்கியத்துவம், இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு பெருவிழா, தேசிய ஒற்றுமை தினம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ச.சற்குணா தலைமை தாங்கினார். உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் க.சுந்தர் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி பேசியதாவது:

நம் நாட்டில் பல நோய்களை நாம் முற்றாக அழித்துள்ளோம். குறிப்பாக போலியோ நோயை ஒழித்துள்ளோம். ஆனால் நமக்கு ரத்தசோகை பெரும் சவாலாக உள்ளது. நாட்டில் 50 சதவீதம் பேருக்கு ரத்த சோகை உள்ளது. இது ஊட்டச்சத்து தொடர்புடைய ஒரு குறைபாடாகும்.

இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். மாதவிடாய் பிரச்சினைகளால் பெண்களுக்கு இந்த நிலை ஏற்படுகிறது. எனவே வளர் இளம் பெண்களும், கர்ப்பிணிகளும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முருங்கை கீரை உள்ளிட்ட அனைத்து கீரைகள், பேரிச்சம் பழம், நவதானியங்கள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாவட்டமாக நாம் அனைவரும் இணைந்து மாற்ற வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வி.கே.பழனி உட்பட பலர் பங்கேற்றனர். இந்தநிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் ஊட்டச் சத்துகண்காட்சியும், வேலூர் புற்றுமகரிஷி சமூக மருத்துவ சேவை மையத்தின் சார்பில்மருத்துவ மூலிகைகள் கண்காட்சியும் அமைக்கப்பட்டன. ஊட்டச் சத்து தொடர்பான விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்