திருச்சி பெல் வளாகத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.விழாவுக்கு, பொது மேலாளர் (பொறுப்பு) எஸ்.வி.னிவாசன் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘அலுவலகப் பணிகளில் மட்டுமில்லாது தனிப்பட்ட வகையிலும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை பேண வேண்டியது அவசியமானது. பெல் நிறுவனம், பங்குதாரர்களுடனான அனைத்து நடவடிக்கைகளிலும் நியாயத்தையும், வெளிப்படைத் தன்மையையும் உறுதி செய்வதற்கு, அதன் அனைத்து வணிக செயல்முறைகளுக்கும் போதுமான அமைப்புகள், நடைமுறைகள் மற்றும் உள்கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. ஊழலுக்கு எதிரான போரில் ஊழியர்கள் தங்களது பங்களிப்பை செலுத்தி முன்மாதிரியாக திகழ வேண்டும்’’ என்றார்.
பின்னர், நேர்மை உறுதிமொழியை னிவாசன் வாசிக்க, அனைத்து ஊழியர்களும் ஏற்றுக் கொண்டனர்.
இந்த ஆண்டின் மையக் கருவான ‘சுதந்திர இந்தியா 75–நேர்மையான சுயசார்பு’ என்ற தலைப்பில் ஊழியர்களுக்கான கட்டுரை, ஓவியப் போட்டிகள், விவாத நிகழ்ச்சிகள், நவ.1-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago