வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அக்சீலியம் கல்லூரி மாணவிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
வேலூர் கோட்டையில் கரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இதனால், கோட்டை வளாகம் புதர் மண்டி கிடப்பதுடன் பல இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. இதையடுத்து பல்வேறு அமைப்புகள் உதவியுடன் தூய்மைப் பணி தொடங்கியுள்ளது.
அதன்படி, வேலூர் கோட்டை யில் உள்ள அரசு அருங்காட்சியகம் வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அக்சீலியம் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் காட்சி ஊடகவியல் துறை மாணவிகள் உதவியுடன் தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது.
அரசு அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை காப்பாட்சியர் சரவணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தூய்மை பணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் அருங்காட்சியகத்துக்கு செல்லும் வழியில் இருந்த புதர்களை அகற்றி தூய்மைப்படுத்தினர்.
இதில், அக்சீலியம் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அமுதா, காயத்ரி, உதவி பேரா சிரியர் ராதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago