சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் - வீடு, வீட்டு மனைப்பட்டா கேட்டு இருளர்கள் மனு :

By செய்திப்பிரிவு

சேத்துப்பட்டு அருகே அன்மருதை கிராமத்தில் வசிக்கும் பழங்குடி இருளர் சமூகத்தினர், வீடு மற்றும் வீட்டு மனைப்பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த அன்மருதை கிராமத்தில் பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த 22 குடும்பங்களைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். கடந்த 50 ஆண்டு காலமாக வசித்து வரும் அவர்களுக்கு, வீட்டு மனை இல்லாததால், கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள், அனைவரும் தங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரநிதிகளிடம் பலமுறை மனு அளித்தும் பலனில்லை.

இந்நிலையில், தனியார் அமைப்பு இயக்குநர் சசிகலா பழனி தலைமையில் 22 குடும் பங்களைச் சேர்ந்தவர்கள் சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவல கத்தில் பணியில் இருந்த மண்டல துணை வட்டாட்சியர் கிருஷ்ண மூர்த்தியிடம் வீட்டு மனை பட்டா வழங்கி வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று மனு அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, “வீடு இல்லாமல் கடந்த 50 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். மழை காலங்களில் எங்களது நிலைமை படுமோசமாக இருக்கும்.

நாங்கள் குடியிருக்கும் குடிசைக்குள் தண்ணீர் புகுந்து விடும். மேலும் குடிசையுடம் சேதமடைந்துவிடும். ஒவ்வொரு முறையும், பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்படுகிறோம். எங்களுக்கு நிரந்தரமாக வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்