கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள், கால்நடைகள் வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, தின்னக்கழனி, காவேரிப்பட்டணம், திம்மா புரம், ஊத்தங்கரை, மூங்கி லேரி, புதூர்புங்கனை, மன்னடிப்பட்டி, கோணப்பட்டி, கல்லாவி ஆகிய கிராமங்களில், கால்நடைகளை கோமாரி நோய் அதிகளவில் தாக்கி வருவதால், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச். செப்டம்பர் ஆகிய 2 மாதங்களில் கால்நடைகளுக்கு கோமாரி உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்த கால்நடைத் துறை சார்பில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. ஆனால், கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தாமல் காலதாமதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற் போது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கம் அதிகரித்து, உயிரிழந்து வருகின்றன. இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர் கூறியதாவது:
கால்நடைகளை வாழ்வாதார மாகக் கொண்டு வாழ்ந்து வரும் இப்பகுதி விவசாயிகளின் மாடுகளுக்கு போர்க்கால அடிப்படையில் கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்திட மத்திய அரசு உடனடியாக கோமாரி நோயை கட்டுப்படுத்தும் தடுப்பூசிகளை அனுப்பி கால்நடைகளின் உயிரைக் காப் பாற்ற நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago