டீசல் விலை உயர்வால் : வாகனங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்வதில் சிக்கல் :

By செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வாடகை வாகனங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இதனால், பேருந்து, லாரி உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வாடகை வாகன உரிமையாளர்கள் வாடகை தொகையை நிர்ணயம்செய்ய முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால், சரக்குப் போக்குவரத்து தொழில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், கடந்த 25, 26 ஆகிய இருதினங்கள் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. இந்நிலையில், நேற்று மீண்டும் விலை உயர்ந்தது. நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ.101.56-க்கும், பெட்ரோல் ரூ.105.45-க்கும் விற்பனையானது.இதுபோல பிரிமியம் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.109-க்கு விற்பனையானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE