திருச்செங்கோடு தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் 175 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சில வாகனங்களில் இருந்த சிறு சிறு தவறுகளை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டன.
தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் பகுதிகளைச் சேர்ந்த 175 தனியார் பள்ளி வாகனங்கள் தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் நேற்று ஆய்வு செய்யப்பட்டன. திருச்செங்கோடு கோட்டாட்சியர் இளவரசி தலைமை வகித்து பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார்.
அப்போது பள்ளி வாகனங்களின் உள்புறம் உள்ள அவசரகால வழி, சிசிடிவி கேமரா, படிக்கட்டுகள், வாகனங்களில் ஒட்ட வேண்டிய அறிவிப்பு தகவல், போக்குவரத்து அலுவலகம் தொடர்பான தகவல்கள் உள்ளிட்டவைகள் ஆய்வுக்கு உட்பட்டுத்தப்பட்டன.
இதில், 10-க்கும் மேற்பட்ட வாகனங் களில் இருந்த சிறு, சிறு தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றை சரி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது, திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன், போக்குவரத்து ஆய்வாளர்கள் பிரபாகர், சத்தியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago