கடலூரில் கிராம ஊராட்சி செயலா ளர்களுக்கு இ - கிராம ஸ்வராஜ் தகவல் தொழில்நுட்ப சேவைகள் பயிற்சி அளிக்கப்பட்டது.
கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளவனார் கலைக் கல்லூரியில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ்அனைத்து கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் தரவு மேலாண்மை மற்றும் இ- கிராம ஸ்வராஜ் மூலம் பிற தகவல் தொழில்நுட்ப சேவைகள் குறித்த பயிற்சியை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது:
கிராம ஊராட்சியில் பல் வேறு திட்டங்கள் மூலம் செயல் படுத்தப்படும் பணிகள், நிதி ஒதுக்கீடுகள், கிராம ஊராட்சி சொத்துக்கள் உருவாக்கம் மற்றும் பராமரித்தல், ஊராட்சியின் வரவு மற்றும் செலவினங்கள் குறித்த தகவல்களை இ-கிராம ஸ்வராஜ் போர்டல் மற்றும் பிஎப்எம்எஸ் இயங்கலை மென்பொருள் மூலம் பதிவேற்றம் செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 684 கிராம ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்து 9 அணிகளாக பிரித்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகள் கணினி பயிற்றுநர்கள் மூலம் அளிக் கப்படுகிறது.
இப்பயிற்சியை மேற்கொள்ப வர்களுக்கு சம்பந்தப் பட்ட மாவட்ட வளமைய அலுவலர் களுக்கு உரிய அறிவுரைகள் வழங் கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், துணைஇயக்குநர் (ஊராட்சிகள்) கண்ணண், புனித வளவனார் கலைக்கல்லூரி தாளாளர் பீட்டர் ராஜேந்திரன், புனித வளவனார் கலைக் கல்லூரி முதல்வர் அருமைசெல்வம், மாவட்ட வள மைய ஊராட்சிகள் தலைமை அலுவலர் கதிர்வேல் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago