ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீதான நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணை திருப்தியாக நடைபெறவில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கணேசன், சுவாமி நாதன். இவர்கள் பாஜக நிர்வாகி களாக இருந்தனர். சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருந்ததால் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்பட்டனர். கும்ப கோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கணேசன், இவர் மனைவி அகிலாண்டம், சுவாமிநாதன், சோலை செல்வம் உட்பட பலரை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இவர்களில் சோலை செல்வம், உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின் றனர். விசாரணை நடைபெற்று வருகிறது. மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.
பின்னர் நீதிபதி, இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் இருக்கும் போது, முக்கிய குற்றவாளியின் மனைவி அகிலாண்டம் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார். கீழமை நீதிமன் றத்தில் முறையான வாதங்களை முன் வைக்காதது ஏன்? ஜாமீன் பெற்றவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரை ஜாமீனில் விட்டால் சொத்துகளை எப்படி பறிமுதல் செய்ய முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு பணத்தை திரும்ப வழங்குவது? இவற்றை கருத்தில் கொள்ளாதது ஏன்?
மேலும் முக்கிய குற்றவாளியின் மனைவி ஒரு வழக்கில்தான் ஜாமீன் பெற்றுள்ளார். ஆனால் அவர் மீது பல வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில் அவரை கைது செய்யாதது ஏன்? விசாரணை முறையாக நடைபெற்றால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். இதைக் கருத்தில் கொண்டு விசாரணை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றார்.
பின்னர் சோலை செல்வத்துக்கு ஜாமீன் வழங்கி, அவர் வாரம் ஒரு நாள் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago