கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 1992-96-ம் ஆண்டு படித்தமுன்னாள் மாணவர்கள் சந்திப்பில்,ஒரு ஏக்கர் பரப்பளவில் பழத்தோட்டம் உருவாக்க மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார்தலைமை வகித்து, பழமரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தார். முன்னாள் மாணவரும்,புதுடெல்லி ஏபிஇடிஏ தலைவருமான எம்.அங்கமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கல்லூரி முதல்வர் கே.இறைவன் அருட்கணி அய்யநாதன், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் டி.ஆறுமுகம், திருச்சி தோட்டக்கலை கல்லூரி முதல்வர் பி.பரமகுரு, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இயக்குநர் எஸ்.டி.சிவகுமார், வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு மையம் இயக்குநர் கே.ஆர். அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
முன்னாள் மாணவர்கள் சார்பில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அத்தி, பேரிச்சை, டிராகன், செர்ரி,முள் சீத்தா போன்ற 350 பழ மரக்கன்றுகளை நட்டு, சொட்டு நீர்ப்பாசன வசதியுடன், சுமார் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில், மாதிரிஅயல்நாட்டு பழப்பயிர் தோட்டத்தை உருவாக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பழ மரங்கள் வறண்ட பகுதிகளுக்கு ஏற்றவையாகும். மற்றும் இவைவளர்வதற்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானது.
இப்பழ மரங்கள் ஒரு வருடத்துக்குள் காய்க்கும் தருணத்துக்கு வந்துவிடும். இதுபோன்ற பழத்தோட்டம் மாணவர்களின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படும் என தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago