திருப்பூரில் பழுதடைந்த ஆழ்குழாயை சரிசெய்து உப்புத் தண்ணீர் வழங்க வலியுறுத்தி, மக்கள் நேற்றுமாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் திலகர் நகர் 3-வது வீதியில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் மோட்டார் பழுது அடைந்திருப்பதால், கடந்த 15 நாட்களாக இப்பகுதி மக்களுக்கு உப்புத் தண்ணீர் விநியோகம் நடைபெறவில்லை. இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்களிடம் பலமுறை தொடர்பு கொண்டு பேசியும்,எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் சாந்தி தலைமையில் வேலம்பாளையம் முதலாவது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், நகரக்குழு உறுப்பினர்கள் அ.ஆறுமுகம், சின்னசாமி, நவபாலன், சாந்தி ஆகியோர் மண்டல அலுவலக கண்காணிப்பாளர் ராஜசேகரிடம் முறையிட்டனர். இதையடுத்து, குழாய் ஆய்வாளர் சண்முகம் அப்பகுதிக்கு சென்று ஆழ்குழாய் பிரச்சினையை ஆய்வு செய்து தீர்த்து வைக்க நடவடிக்கை மேற்கொண்டார். அத்துடன் திலகர் நகர் 2-வது வீதியிலும் தண்ணீர்பிரச்சினையை தீர்க்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago