தாராபுரம் அரசு மருத்துவமனைதரம் உயர்வு :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனைகள், அரசு தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படுவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் அரசு மருத்துவமனை, தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

நோயாளிகள் சிகிச்சைபெற 200-க்கும் அதிகமானபடுக்கைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதுபோல, மருத்துவமனைக்கு என மயக்க மருந்துநிபுணர், மூத்த அறுவைசிகிச்சை நிபுணர் மற்றும் ஒவ்வொரு துறைக்கும் அறுவை சிகிச்சைநிபுணர்கள் பணியமர்த்தப்படுவார்கள். விரைவில் இந்த பணிகள் அனைத்தும் நடைபெறும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்