கரோனாவுக்கு திருப்பூர் அரசு மருத்துவர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

கேரள மாநிலம் குமுளியை சேர்ந்தவர் அருள்ராஜா (56). இவர் திருப்பூர் எல்.ஆர்.ஜி.ஆர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக, திருப்பூரில் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இவர் ஒரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தார். இதற்கிடையே, கடந்த மாதம் 27-ம் தேதி அருள்ராஜாவுக்கு சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால், கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அருள்ராஜாவுக்கு அவர் பணியாற்றிய, திருப்பூர் மாநகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்