திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலம் 26 மற்றும் 27-வது வார்டுகளில் உள்ள சாக்கடைகளில் கழிவு நீர் முறையாக செல்லாததால், வீடுகளுக்குள் கழிவுநீர் புகுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி 27-வது வார்டு காட்டன் மில் சாலையில் சாக்கடைப் பாலம் உள்ளது. இங்கு சாக்கடை கழிவு நீர் செல்லாததால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து சாக்கடை பாலப்பகுதியில் இருந்த மண்ணை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். எனினும் சாக்கடை நீர் வெளியேறவில்லை. ஒவ்வொரு முறை சாக்கடைப் பாலம், தூர் வாருவதால் அப்பகுதிஆழமாகி குளம்போல சாக்கடை நீர் தேங்குகிறது. மழைக்காலங் களில்குடியிருப்புப் பகுதிக்குள்மழைநீருடன் சாக்கடை நீரும் புகும் நிலையுள்ளதாகவும், சாக்கடை நீர் வெளியேற தேவையான நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago