காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் முதல்தவனை தடுப்பூசி 6,51,126 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 2,29,003 பேருக்கும் போடப்பட்டுள்ளது.
இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டிய பயனாளிகளை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறோம். கரோனாவை ஒழிக்க மிகப் பெரிய ஆயுதம் தடுப்பூசிதான். எனவே, பொதுமக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியை உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கி இருப்பதால், டெங்கு, மலேரியா, வண்டுகாய்ச்சல் போன்றவை கொசுக்கள் மூலம் பரவ வாய்ப்புள்ளது.
வீட்டைச் சுற்றி வீசப்பட்டுள்ள டயர், உடைந்த சட்டி, மண்பானை, தேங்காய் ஓடு போன்றவற்றில் மழைநீர் தேங்கி, ஏடீஸ் கொசுக்கள் உருவாகி, டெங்கு காய்ச்சல் பரவும். இதைத் தடுக்க, பொதுமக்கள் தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள தேவையற்ற பொருட்களை அகற்றி, வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால், தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று, மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago