திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூக இடைவெளியின்றி ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி நேற்று ஏற்கப்பட்டது.
கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், பெருந்தொற்றில் இருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் போன்ற நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத் தப்பட்டு வருகிறது.
ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு சார்பில் நடைபெறும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வைக் குழுக் கூட்டம் உள்ளிட்ட ஆய்வுக் கூட்டங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது இல்லை.
இந்நிலையில், மனிதவள மேலாண் துறை சார்பில் செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலமாக ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதி மொழி ஏற்பு நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, கூடுதல் ஆட்சியர் பிரதாப் மற்றும் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் சமூக இடைவெளியின்றி கூட்டமாக நின்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். ஆட்சியர் அருகே நின்றிருந்த அதிகாரிகளும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வில்லை.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறையினர் கூறும்போது, “முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது என்பது நமது வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது. அதனை தவிர்க்க முடியாது. கரோனா தொற்று பரவல் குறைந்திருந் தாலும், அவை முழுமையாக அழிக்கப்படவில்லை. எனவே,கரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றுவதை தவிர்க்க வேண் டாம்” என கேட்டுக் கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago