திருப்பத்தூர் மாவட்டத்தில் - அரசு கூடுதல் வழக்கறிஞர்களுக்கு ஆணைகள் வழங்கல் :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் திமுக தலைமை யிலான ஆட்சி அமைந்த பிறகு, அரசு வழக்குகளில் ஆஜராகி வாதாட மாவட்டம் வாரியாக அரசு தலைமை வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், அரசு பிளீடர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில், திருப்பத் தூர் மாவட்டத்தில் 10 அரசு கூடுதல் வழக்கறிஞர்கள், அரசு பிளீடர்களை நியமித்து தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளி யிட்டது. அதன்படி, திருப்பத்தூர் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக பி.டி.சரவணன், எம்.சரவணன் ஆகியோரும், திருப்பத்தூர் சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக யோகேஷ் குமார், ராஜகுமாரனும், வாணியம்பாடி சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக செந்தில்வேலன், சுரேஷ்குமாரும், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக வீரமணியும், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக இந்திராவும், வாணியம்பாடி மாவட்ட முதன்மை நீதிமன்ற அரசு வழக்கறிஞராக பூபதியும், ஆம்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற அரசு வழக்கறிஞராக ரமேஷ்பாபு என மொத்தம் 10 பேர் அரசு சட்ட அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து, அரசு சட்ட அலுவலர்களுக்கு ஆணைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்