மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செக்கானூரணி இன்ஸ்பெக்டர் சிவசக்தி, விக்கிரமங்கலம் எஸ்.ஐ. வெற்றிவேல் அடங்கிய போலீஸார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். தெப்பத்துப்பட்டி கிராமத்தில் மோட்டர் சைக்கிளில் சென்ற 3 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்தனர்.
அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் குமார்( 20), பொம்மம்பட்டி ஜெயம்(28) என்பது தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தப்பி ஓடிய என்.கோவில்பட்டியைச் சேர்ந்த மணிகண்டனை தேடிவருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago