விழுப்புரம் மாவட்டத்தில் 43 வட்டாட் சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் மோகன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் வெங்கடசுப் பிரமணியன் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முகஉதவியாளராகவும், திருவெண் ணெய்நல்லூர் ஆனந்தகுமார் விழுப்புரத்துக்கும், தென்னக ரயில்வே வட்டாட்சியர் இளவரசன் விக்கிரவாண்டிக்கும், தேசிய நெடுஞ்சாலை வட்டாட்சியர் உமா மகேஸ்வரன் வானூருக்கும், டாஸ்மாக் பாஸ்கரதாஸ் திருவெண்ணெய்நல்லூருக்கும், விழுப்புரம் தனி வட்டாட்சியர் திருநாவுக்கரசு கண்டாச்சிபுரத்துக்கும், ஆட்சியர்அலுவலக மேலாளர் வசந்தகிருஷ்ணன் திண்டிவனத்திற்கும், தனி வட்டாட்சியர்கள் பழனி செஞ்சிக்கும், கோவர்தனர் மேல்மலையனூருக்கும், வானூர் சரவணன் மரக்காணத்திற்கும், விக்கிரவாண்டி தமிழ் செல்வி தேசிய நெடுஞ்சாலை தனிவட்டாட்சியராகவும், வானூர் சங்கரலிங்கம் பறக்கும் படைக்கும், கண்டாச்சிபுரம் கார்த்திகேயன் மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், திருவெண்ணெய் நல்லூர் ஆனந்தன் டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டிவனம் செல்வம் விழுப் புரத்திற்கும், செஞ்சி ராஜன் அரசுகேபிள் டிவிக்கும், மேல்மலையனூர் நெகருன்னிசா செஞ்சிக்கும், மரக்காணம் உஷா இலங்கைஅகதிகள் முகாம் வட்டாட்சியராகவும், மரக்காணம் சுந்தரராஜன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக மேலாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் திண்டிவனத்திற்கும், விழுப்புரம் கீதா டாஸ்மாக் மேலாளராகவும், பறக்கும்படை வேல்முருகன் பேரிடர் மேலாண்மைக்கும், பேரிடர் மேலாண்மை சுப்பிரமணியன் விழுப்புரத்திற்கும், மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளர் கலா மரக்காணம் பேரிடர் மேலாண்மைக்கும், பேரிடர் மேலாண்மை பாலசுப்பிரமணியன் முத்திரைதாள் தனி வட்டாட்சியராகவும், கேபிள் டிவி வட்டாசியர் திண்டிவனம்முத்திரைத்தாள் வட்டாட்சியராகவும், திண்டிவனம் முத்திரைத்தாள் தனி வட்டாட்சியர் ரமா விழுப்புரத்திற்கும், விழுப்புரம் செந்தில்குமார் திண்டிவனம் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், திண்டிவனம் சார்-ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிவபிரபாநாதன் விழுப்புரத்திற்கும், செஞ்சி புஷ்பாவதி திண்டிவனம் கோட்ட கலால் அலுவலராகவும், திண்டிவனம் கோட்ட கலால் அலுவலர் ஜோதிவேல் திண்டிவனத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டிவனம் தனி வட்டாட்சியர் தங்கமணி திண்டிவனம் சிப்காட் தனி வட்டாட்சியராகவும், திண்டிவனம் சிப்காட் தனி வட்டாட்சியர் செல்வகுமார் மேல்மலையனூர் தனி வட்டாட்சியராகவும், மேல் மலையனூர் தனிவட்டாட்சியர் ஞானம் மரக்காணம் தனி வட்டாட்சியராகவும், டாஸ்மாக் மேலாளர் ரங்கநாதன் விழுப்புரம் தனி வட்டாட்சியராகவும், விழுப்புரம் தனி வட்டாட்சியர் செந்தில் விழுப்புரம் கோட்ட கலால் அலுவலராகவும், விழுப்புரம் கோட்ட கலால் அலுவலர் பரமேஸ்வரி திண்டிவனம் சிப்காட் தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திண்டிவனம் சிப்காட் தனி வட்டாட்சியர் ஜெயலட்சுமி டாஸ்மாக் கலால் மேற்பார்வை அலுவலராகவும், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் மனோகரன் செஞ்சி தனி வட்டாட்சியராகவும், செஞ்சிதனிவட்டாட்சியர் பிரபு வெங்கடேஸ்வரன் வானூர் தனி வட்டாட்சியராகவும், விழுப்புரம் டாஸ்மாக் கலால் மேற்பார்வை அலுவலர் இளங்கோவன் விழுப்புரம் தனிவட்டாட்சியராகவும், விழுப்புரம் தனிவட்டாட்சியர் கோவிந்தராஜ் தென்னக ரயில்வேயின் தனி வட்டாட்சியராகவும், இலங்கை அகதிகள் முகாம் தனி வட்டாட்சியர் ஜெயலட்சுமி திருவெண்ணெய்நல்லூர் தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் மோகன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago