கூட்டுறவு அங்காடிகளில் பட்டாசு விற்பனை தொடக்கம் : மாவட்ட ஆட்சியர், வேலூர் எம்எல்ஏ பங்கேற்பு

By செய்திப்பிரிவு

வேலூர் கற்பகம் கூட்டுறவு அங்காடியில் தீபாவளி பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

வேலூர் அண்ணா சாலையில் உள்ள கற்பகம் கூட்டுறவு அங்காடியில் தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனை நேற்று தொடங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் பட்டாசு விற்பனையை தொடங்கி வைத்தனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வேலூர், குடி யாத்தம், ஆற்காடு, திருப்பத்தூர், வாணியம்பாடி, காட்பாடி உள்ளிட்ட 7 இடங்களில் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, ரூ.1.50 கோடிக்கு அளவுக்கு பட்டாசுகள் வரப் பெற்றுள்ள நிலையில் மொத்தம் ரூ.2.50 கோடிக்கு பட்டாசு கொள்முதல் செய்ய திட்ட மிடப்பட்டுள்ளது. வரும் 5-ம் தேதி வரை பட்டாசு விற்பனை செய்யப்பட உள்ளது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பட்டாசு வாங்குபவர்களுக்கு டோர் டெலிவரி செய்யப்படும் என்றும் கிப்டு பாக்ஸ்களுக்கு 5 சதவீத விலையை குறைத்து விற்பனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருகுண அய்யப்பதுரை, மேலாண்மை இயக்குநர் ரேணுகாம்பாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்