விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பருவமழை தொடங்கிய நிலையில் விவசாயிகள் சம்பா நடவுக்கான பணிகளை தொடங்கியுள் ளனர். இதனால் உர விற்பனை யாளர்கள், உரங்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதில் ஈடுபட்டு வருவதாகவும், அதன்படி விழுப்புரம்மாவட்டம் திருவெண்ணெய்நல் லூர் வட்டம் பெரியசெவலைகூட்ரோடு திருவெண்ணெய் நல்லூர் செல்லும் சாலை பகுதி யில் உள்ள உரக்கடையில் டிஏபிஉரம் ஒரு மூட்டையின் விலை ரூ.1,500-க்கும், யூரியா ஒரு மூட்டையின் விலை ரூ.550 -க்கும்விற்பதாக அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள், உரிய விசா ரணை நடத்தி, உர விற்பனை முறைப்படுத்துவதோடு, அதிக விற்பனைக்கு உரங்களை விற் பனை செய்யும் கடையின் உரிமை யாளர் மீது நடவடிக்கை எடுத்து கடைக்கு சீல் வைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட வேளாண்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, இணை இயக்குநர், ஆட்சியரின் நேர்முக(வேளாண்) உதவியாளர் உள்ளிட்ட எவரும் பேச முன் வரவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்