பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் - காவலில் எடுத்த 5 பேர் மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு :

பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராஜ் கொலை வழக்|கில் கைதான 5 பேரை காவலில் எடுத்த சிபிசிடி போலீஸார் விசார ணையை முடித்து மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத் தனர்.

கடலூர் பண்ருட்டி அருகே உள்ளபனிக் கன்குப்பத்தில் திமுகவைச் சேர்ந்த கடலூர் மக்களவை உறுப்பி னர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷூக்கு சொந்தமான முந்திரி ஆலை அமைந்துள்ளது. இங்கு வேலை பார்த்து வந்த மேல்மாம்பட்டைச் சேர்ந்தகோவிந்தராஜ் கடந்த செப்.19-ம் தேதி இரவு மர்மமான முறையில் உயிரிழந்தார். வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார், இதைகொலை வழக்காக பதிவு செய்து, கடந்த 9-ம் தேதி யன்று எம்பி ரமேஷ் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, ரமேஷின் உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப் பட்ட நடராஜன், அல்லாபிச்சை, கந்தவேல், வினோத், சுந்தர்ராஜன் ஆகிய 5 பேரும் கடந்த 22-ம் தேதி கடலூர் கிளை சிறையில் இருந்து கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி (பொறுப்பு) சிவபழனி முன்னிலையில் ஆஜர்ப டுத்தப்பட்டனர். அப்போது, 5 பேரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணையையும் நீதிபதி 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இந்த நிலையில் 5 பேரும் பேரையும் 23-ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம்(அக்.23) 5 பேரும் கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது 5 பேரையும் 2 நாள் விசாரணைக்கு சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி பிரபாகர் 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்து 5 பேரையும் கடலூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து சென்று சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் (அக்.23) இரவு 10 மணிக்கு 5 பேரையும் மீண்டும் கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி பிரபாகர் அவர்களை நவம்பர் மாதம் 2-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீஸார் அவர்களை விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர்.

கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்