நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்து கொண்டாட வேண்டும் : தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

By செய்திப்பிரிவு

நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்து, அத்தினத்தை கொண்டாட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரி வித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பா் 1-ம் தேதியை, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்கள் அவர்களுக்கான தனிக் கொடியை ஏற்றி கொண்டாடி வருகிறார்கள். ஆனால், கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களை போன்று, தமிழ் நாட்டிற்கு என தனிக்கொடி உரு வாக்கப்படவில்லை. 1970-களில் தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி வேண்டும் என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் கோரிக்கை விடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலை காரணமாக ஒன்றிய அரசிடம் இருந்து அனுமதி பெற முடியவில்லை. இந்த நிலையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 61 ஆண்டுகளை கடக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி என்ற கனவை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும்.

தமிழ்நாட்டுக்கு என தனிக்கொடிஅமைப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதைத் தடுக்கும் அதிகா ரம் ஒன்றிய அரசுக்கு கிடையாது. எனவே, நவம்பர் 1ம் தேதியை, தமிழ்நாடு தினமாக அறிவித்து, அத்தினத்தை கொண்டாடப்பட வேண்டும்.மேலும், தமிழர்களின் தொன்மையும், வரலாற்றையும் பறைசாற்றும் வகையில் தமிழ் நாட்டிற்கு தனிக்கோடியை உருவாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக, அரசியல் கட்சிகளை யும், அரசியல் இயக்கங்களையும் அழைத்து ஆலோசனை நடத்து வதோடு, தனிக்கொடியை உருவாக்குவதற்கான பணிகளை உடன டியாக தொடங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்