‘‘தமிழகம் முழுவதும் சத்துணவுத் துறையில் 49 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பாவிட்டால், சத்துணவு வழங்குவதில் சிக்கல் ஏற்படும்,’’ என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் நூர்ஜஹான் தெரிவித்தார்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம், அதன் தலைவர் முத்துக்குமார் தலைமையில், மாவட்டச் செய லாளர் மிக்கேல் அம்மாள் முன்னிலையில் நடந்தது. மாவட்ட இணைச்செயலாளர் பாண்டி வரவேற்றார். கூட்டத்துக்குப் பிறகு மாநில பொதுச் செயலாளர் நூர்ஜகான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சத்துணவு ஊழியர்க ளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். சத்துணவுத் துறையில் காலியாக உள்ள 49 ஆயிரம் பணியிடங்களை பள்ளி திறக்கும்போதே நிரப்ப வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் சிக்கல் ஏற்படும். பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டத்தை வரவேற்கிறோம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago