பெண்களைவிட ஆண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய் : வேலம்மாள் புற்றுநோய் துறை தலைவர் தகவல்

By செய்திப்பிரிவு

உலக மார்பகப் புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு வேலம்மாள் மருத்துவமனை, யங் இந்தியன்ஸ் ஆகியவை சார்பில் மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

கருத்தரங்கை வேலம்மாள் மருத்துவமனை இயக்குநர் கார்த்திக் முத்துராமலிங்கம் தொடங்கிவைத்தார். வேலம்மாள் மருத்துவக் கல்லூரி புற்று நோய் துறைத்தலைவர் ராஜ்குமார் பேசியதாவது: மார்பகப் புற்று நோய் ஆரம்ப காலத்தில் கண்டறியப்படுவதில்லை. பெண்கள் உடற்பயிற்சி மற்றும் சுயபரிசோதனைகள் மூலம் மார்பகப் புற்றுநோய் கட்டி களை அறிந்து சிகிச்சை பெறுகின்றனர். மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் வரும். ஆண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் மிகவும் பாதிப்பை உண்டாக்கும். ஆனால், அதைப் பற்றி ஆண் களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. ஆகையால் ஆண்கள், பெண்கள் விழிப்புணர்வுடன் இருந்து புற்றுநோய் கட்டியை எதிர்கொள்வது அவசியம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்