இயற்கை வளத்தை பாதுகாப்பது நமது கடமை : சார்பு நீதிபதி பரமேஸ்வரி பேச்சு

75-வது சுதந்திரதின விழாவையொட்டி சிவகங்கை அருகே பூவந்தியில் உள்ள மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

உதவிப் பேராசிரியர் ரஞ்சனி வரவேற்றார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பரமேஸ்வரி தலைமை வகித்து பேசியதாவது: ஒவ்வொரும் அடிப்படை கடமைகளை நிறைவேற்ற வேண்டும். நீர்நிலைகள், வனம், விலங்குகள், கனிமங்கள் ஆகியவற்றை பாதுகாப்பது நமது கடமை. அதேபோல் உரிமைகளைப் பெறுவதற்கும் நமக்கு உரிமை உண்டு. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், தனி மனித பாதுகாப்பு சட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

பிரிஸ்ட் பல்கலைக்கழக சட்டப் பள்ளி சிறப்பு பேராசிரியர் பழனியப்பன், கல்லூரி தாளாளர் அசோக், முதல்வர் ராஜராஜேஸ்வரி உள்ளிட்டோர் பேசினர். சட்டம் சார்ந்த தன்னார்வலர் நாகேந்திரன், காளிதாஸ் ஏற்பாடுகளை செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE