மருதுபாண்டியர்கள் நினைவு தினத்தையொட்டி திருப்பத்தூரில் உள்ள அவர்களது சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
விடுதலை போரில் ஆங்கிலேயர் களால் தூக்கிலிடப்பட்டு வீர மரணமடைந்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் நினைவு தினம் திருப்பத்தூரில் உள்ள அவர்களது நினைவு மண்டபத்தில் நேற்று நடந்தது. அதிமுக சார்பில் முன் னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதய குமார், காமராஜ், பாஸ்கரன், கோகுல இந்திரா, செந்தில்நாதன் எம்எல்ஏ ஆகியோர் மருதுபாண்டி யர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் காங்கிரஸ் சார்பில் எம்.பி.க்கள் கார்த்தி சிதம்பரம், திருநாவுக்கரசர், மாங்குடி எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ராமசாமி மற்றும் மதுரை ஆதீனம், பாஜக மாவட்டத் தலைவர் மேப்பல்சக்தி, மதிமுக மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன் உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago