தூத்துக்குடி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் மு.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசு தேசிய அளவில் அனைத்து வகையான அமைப்புசாரா தொழி லாளர்களின் விவரங்களையும் eSHRAM / NDUW என்ற இணையவழி தரவுதளத்தில் 31.12.2021-க்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தியுள்ளது. கட்டுமான தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சாலையோர விற்பனையாளர்கள் மற்றும் அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள், மத்திய அரசு வழங்கும் சிறப்பு சலுகைகள், தொழில் மேம்பாட்டு கடன் உதவிகள், விபத்து காப்பீடுகள், மானியங்கள் மூலம் முழுமையாக பயனடைய இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர் கள் ஆதார் எண்ணை செல்போன் எண்ணுடன் இணைத்திருந்தால் மட்டுமே இந்த இணையதளத்தில் பதிவு செய்ய முடியும். எனவே தங்கள் பகுதி தபால்காரர்கள் மூலம் தங்கள் செல்போன் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைத்துக் கொள்ள தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தபால்காரர்களை அணுக முடியாதவர்கள், அருகில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று பயனடையலாம். எனவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் அஞ்சல் நிலையங்களில் செயல் பட்டு வரும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago