பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தின் கீழ் இதுவரை 2.80 லட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது: அரசு நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 18 பேருந்துகளும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து 14 பேருந்துகளும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 32 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளில் நாளொன்றுக்கு சுமார் 12,500-க்கும் மேற்பட்ட பெண்கள் இலவசமாக பயணித்து பயன்பெற்று வருகின்றனர். அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 2.80 லட்சம் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago