உத்தர பிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்திக்கு அஞ்சலி :

By செய்திப்பிரிவு

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் கூட்டத்தில் கார் ஏற்றி கொல்லப்பட்ட 5 விவசாயிகளின் அஸ்தி நேற்று பெரம்பலூருக்கு கொண்டு வரப்பட்டது.

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் அஸ்தி வாகனத்துக்கு பெரம்பலூர் மாவட்ட ஐக்கிய விவசாய முன்னணி அமைப்பு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அஸ்தி வாகனம் ஊர்வலமாக புறப்பட்டு புதிய பேருந்து நிலையம், பாலக்கரை, வெங்கடேசபுரம் வழியாக பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள காந்தி சிலையை அடைந்தது. அங்கு விவசாயிகள், பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி கலசம் வைக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஞானசேகரன், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலாளர் காமராஜ், விசிக விவசாய அணி மாநிலச் செயலாளர் வீர செங்கோலன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் முகமது அலி, மதிமுக ஆலோசனைக்குழு துரைராஜ், திமுக பொதுக்குழு முகுந்தன் உள்ளிட்டோர் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்