தென்காசி மாவட்டம், ஆலங்குள த்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது முகநூல் பக்கத்தில் இருந்த தொலை பேசி எண் மூலம் தொடர்பு கொண்ட நபர், 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதற்கு, ரூ.40 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து, கூகுள் பே மூலம் 40 ஆயிரம் ரூபாயை செல்வம் அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர், கடன் வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் செல்வம் புகார் அளித்தார்.
சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி வழக்கு பதிவு செய்து, மோசடி செய்தவரின் தொலைபேசி எண் மற்றும் வங்கி விவரங்களை வைத்து முகவரியை கண்டறிந்தார். இதில், மோசடியில் ஈடுபட்டது இடையர் பாளையம் பாரதியார் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடினர். இந்நிலையில், கார்த்திகேயன் கோவையில் இருப்பது தெரியவந்தது. உடனடி யாக அங்கு விரைந்த தனிப்படை உதவி ஆய்வாளர் மாதவன் தலைமையிலான போலீஸார் கார்த்திகே யனை கைது செய்தனர். கார்த்திகேயன் பலரிடம் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago