கற்பக விருட்சம் என அழைக்கப் படும் பனை மரங்களை பாது காக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சி யரின் அனுமதியை பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட் டம் சாத்தான்குளம் அருகே உள்ள பழங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சடையன்கிணறு- கல்விளை சாலையில் உள்ள தனியார் நிலங்களில் கடந்த ஒரு வாரமாக அனுமதியின்றி பனைமரங்கள் வெட்டப்பட்டு வந்தன.
நேற்றும் அந்த பகுதியில் பனை மரங்கள் வெட்டப்பட்டன. இதுகுறித்து தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்க தலைவர் எஸ்.ஜே.கென்னடிக்கு தகவல் கிடைத்தது. அவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் புகார் தெரிவித்தார்.
வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அதிகாரிகள் வருவதை அறிந்ததும் அங்கிரு ந்தவர்கள் ஓடிவிட்டனர். பனை மரங்களை வெட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கல்சூளைகளுக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago