வஉசி 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி சிதம்பரனார் நினைவு மேல்நிலைப் பள்ளி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் கவிதை போட்டிகள் நடைபெற்றன.
‘வஉசியின் முப்பரிமாணம்' என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியிலும், ‘ஏற்றமிகு இந்தியா உருவாக எழுந்துவா வஉசி' என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டி யிலும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். போட்டிகளை பள்ளி செயலாளர் வள்ளியம்மாள் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை வள்ளி முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற தமிழாசிரியர் சங்கரலிங்கம் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் போட்டிகளை நடத்தினர்.
பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்
இதன் தொடர்ச்சியாக நவம்பர் மாதம் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘வஉசி வழியில் நடைபோடுக' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், ‘வஉசி ஓட்டிய கப்பல் அல்லது வஉசி இழுத்த செக்கு' என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘தியாகத்தின் மறுபெயர் வஉசி' என்ற தலைப்பில் பேச்சு போட்டியும், ‘ஒன்றுபட்ட இந்தியா அல்லது வலிமைமிக்க இந்தியா' என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும், 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘தொழிலாளர் தோழர் வஉசி' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், ‘வண்டமிழ் வளர்த்த வஉசி' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடைபெறுகிறது என, பள்ளி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago