கோவையில் ஒரே நாளில் 1.18 லட்சம் பேருக்கு தடுப்பூசி :

கோவை மாவட்டத்தில் ஆறாவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. ஊரக பகுதிகளில் 1,104, மாநகராட்சிப் பகுதிகளில் 266 என மொத்தம் 1,370 முகாம்கள் நடத்தப்பட்டன.

கோவை அரசு மருத்துவமனை, வ.உ.சி மைதானம் ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாமை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டார். இதுதொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கோவையில் நேற்று நடைபெற்ற முகாமில் 1.18 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்குமுன் நடைபெற்ற 5 முகாம்களில் மட்டும் மொத்தம் 5.51 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது”என்றனர்.

நீலகிரி மாவட்டம்

நீலகிரியில் 292 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும், 20 நடமாடும் முகாம் களும் அமைக்கப்பட்டு, தேயிலை தோட்டங்களில்பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், பழங்குடியினருக்கும் முன்னுரிமை வழங்கி தடுப்பூசி செலுத்தப்பட்டது. இப் பணியில் 1,180 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று 29 ஆயிரத்து 795 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், காங்கயம், முத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். மேலும், சுகாதார நிலையத்தில் ஆரோக்கிய பூங்கா அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்