அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை - நேரு கல்வி குழும நிறுவனங்களின் திட்டங்களுக்கு நிதியுதவி :

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (டிஎஸ்டி) 2021-22-ம் கல்வியாண்டில், நேரு கல்வி குழும நிறுவனங்களின் (கேரளா மற்றும் தமிழ்நாடு) ஆக்கப்பூர்வ மற்றும் புதுமையான திறன்களின் 20 திட்டங்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.

நேரு கல்விக்குழும நிர்வாகம், 10 தொடக்க திட்டங்களை மேற்கொள்ள ரூ.25 லட்சம் தொகையை வழங்கியுள்ளது. ஸ்மார்ட் வாட்டர் கண்காணிப்பு அமைப்பு, பெண்கள் பாதுகாப்பு கடிகாரங்கள், முகமூடி, முக அங்கீகாரம், புராஜெக்ட் கம்ப்யூட்டர், கருவூலங்களுக்கான தானியங்கி பணம் எண்ணும் இயந்திரங்கள், மைண்ட் இன்ஜினியரிங் மூலம் செய்தி இடைமுகம், ஐஆர்எப் ட்ரைடென்ட் ரிமோட், பேப்பர் கிரீட் பேவர் பிளாக் ஆகியவை சில புதுமையான திட்டங்களில் அடங்கும்.

டேபிள் டாப் லோ ஸ்பீட் சப்ஸோனிக் விண்ட் டன்னல், குறைந்த விலை 8 சேனல் பிரஷர்ஸ்கேனர், ஸ்மார்ட் மற்றும் சுய நம்பகமான இருசக்கர வாகனங்கள், ஆட்டோமோட்டிவ் பிளாக் பாக்ஸ், சிப்பி ஓடு மற்றும் ஆர்கனட் பைபர் மூலம் இன்டர்லாக் டைல்ஸ் உற்பத்தி போன்றவையும் இதில் அடங்கும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மற்றும் நிர்வாகத்தால் நிதி அங்கீகாரத்துடன் திட்டங்களை அனுமதிப்பதில் இத்தகைய அங்கீகாரங்கள் மாணவர்களுக்கு பெரியஉந்துதலாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்