கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசி, லாரி பறிமுதல் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாகவும், மாவட்டத்தில் இருந்தும் கர்நாடக, ஆந்திர மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதனால் மாநில எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்ஐ தென்னரசு மற்றும் போலீஸார், கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலை, ராசுவீதி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனையிட்டனர். அதில், 160 மூட்டைகளில், 8,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. விசாரணையில் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் கிருஷ்ணகிரி, ஜோதி விநாயகர் தெரு செல்வம் (54), மகாராஜ கடை வள்ளுவர்புரம் காந்த் (23) என்பதும், கிருஷ்ணகிரி நகர் பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீஸார், ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்