கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் அத்திப்பள்ளம் மற்றும் நாகனூர் கிராமத்தில் 10 விவசாயிகளின் வயல்களில், நிலக்கடலை சாகுபடியில் இயந் திரங்களின் பயன்பாடு குறித்து விளக்குவதற்காக, முதன்மை செயல்விளக்கத் திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு வயல் தினவிழா, எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மையம் சார்பில் நடந்தது. முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவரான சுந்தர்ராஜ், முதன்மை செயல்விளக்கத் திடலின் நோக்கம் மற்றும் பண்ணை இயந்திரங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
நிலக்கடலை சாகுபடியில் வேலையாட்கள் பற்றாக்குறை யினையும், ஆட்கூலி செலவினை குறைத்து, அதிக மகசூல் பெறுதவற்கு பயன்படக்கூடிய பண்ணைக் கருவிகளின் பயன்கள் குறித்தும் வேளாண்மை பொறியியல் துறை திட்ட உதவியாளர் முகமது இஸ்மாயில் விளக் கினார். வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில் நுட்ப வல்லுநர் (மண்ணியல்) குணசேகர், புதிய ரகங்களையும், அதன் மகசூலை பெருக்கும் முறைகளை விளக்கினார்.
விவசாயி செந்தில் பேசுகையில், நிலக்கடலை விதைப் பான் மூலம் விதைப்பதினால் ஆட்கூலி செலவினை 75 சதவீதம் சேமிப்பதுடன், பயிர்களின் எண்ணிக்கை பராமரித்து கூடுதலாக 30 முதல் 40 சதவீதம் மகசூல் பெறலாம் என்றார். இந்நிகழ்ச்சியில், நாகனூர் மற்றும் அத்திப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 30 விவசாயிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago