6-ம் கட்ட கரோனா மெகா தடுப்பூசி முகாம் - திருவள்ளூர் மாவட்டத்தில் 83,000 பேருக்கு தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 6-ம் கட்ட கரோனா மெகா தடுப்பூசி முகாமை, அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். இதில், 83,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் நகராட்சி, உழவர்சந்தை அருகில் நேற்று நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசிமுகாமை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும்நடைபெறும் 6-ம் கட்ட மெகாதடுப்பூசி முகாமில், திருவள்ளூர்மாவட்டத்தில் 1,200 முகாம்கள்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இப்பணிக்காக மாவட்டம் முழுவதும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் என 4,800 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர் தாமாக முன்வந்து செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, திருவள்ளூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் டாக்டர்ஜவஹர்லால், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ்,திருவள்ளூர் சுகாதார அலுவலர்கோவிந்தராஜுலு, மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள்பங்கேற்றனர். நேற்றைய கணக்கெடுப்பின்படி, திருவள்ளூரில் 60,150 பேருக்கும், பூந்தமல்லியில் 22,890 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்